அதிவேக 2,500..! ஷுப்மன் கில் புதிய சாதனை!

அதிவேக 2,500..ஷுப்மன் கில் புதிய சாதனை...
அதிவேக 2,500..! ஷுப்மன் கில் புதிய சாதனை!
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது.

இந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்தப் போட்டியில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஷுப்மன் கில்.

கில் இந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் 2 அரைசதங்கள் மற்றும் 1 சதம் விளாசியுள்ளார். ஒரு தொடரின் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசிய 7 வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய அணிக்காக அறிமுகமான கில்லின் 50 வது போட்டி இதுவாகும். 50-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்களை எட்டிய வீரர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லாவின் சாதனையையும் முறியடித்துள்ளார். குறைந்த இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் விளாசியவர் என்ற சாதனைக்கும் கில் சொந்தக்காரர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல்: ஆப்கன் வீரர் கஸன்ஃபர் விலகல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com