
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக இளம் சுழற்பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபையில் நடைபெற்றது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகின்றன. சில அணிகள் தங்களது அணிகளுக்கான புதிய கேப்டன்களையும், பயிற்சியாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அல்லா காஸன்ஃபர் விலகல்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் அல்லா காஸன்ஃபர் விலகியுள்ளார்.
அல்லா காஸன்ஃபருக்குப் பதிலாக மும்பை அணியில் முஜீப் வுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை முஜீப் உர் ரஹ்மான் 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அல்லா காஸன்ஃபருக்கு மாற்று வீரராக முஜீப் வுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.