
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் முகமது அசாரூதின் 149* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
கேரள அணியில் சச்சின் பேபி 69, சல்மான் நிஜார் 52 ரன்களும் எடுத்தார்கள்.
குஜராத் சார்பில் அர்ஜன் நாக்வாஸ்சல்லா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இது அசாரூதினின் 2ஆவது முதல்தர சதமாகும். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
303 பந்துகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கேரளாவின் ஸ்கோர் கார்டு
அக்ஷய் சந்திரன் - 30
ரோஹன் குன்னம்மல் - 30
வருண் நாயனார் - 10
சச்சின் பேபி - 69
ஜலஜ் சக்சேனா - 30
முகமது அசாரூதின் - 149*
சல்மான் நிஜார் - 52
அஹ்மது இம்ரான் - 24
ஆதித்யா சர்வாத் -14*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.