1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்படம்: ஏபி
Published on
Updated on
1 min read

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 71/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் வில் யங் 48, டேரில் மிட்செல் 9 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தொடக்க வீரர் டெவான் கான்வே 10 ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் நசீம் ஷா பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஒருநாள் போட்டிகளில் 7,037 ரன்கள் குவித்துள்ள கேன் வில்லியம்சன் 48.87 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, அப்ரார் அஹமது தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com