6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி..
தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி..
Published on
Updated on
1 min read

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா- வங்கதேசம் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சந்தோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் கேப்டன் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் சந்தோ ரன்கள் ஏதுமின்றி 0 ரன்னில் வெளியேறினார்.

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி பரிதாபமான நிலையில் இருந்தது. அதன்பின்னர், ஜோடி சேர்ந்த தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி இருவரும் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய வீரர்களும் திணறினர்.

ஜேக்கர் அலி 68 ரன்களில் இருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தனர். மேலும், இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 150 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த முதல் வங்கதேச ஜோடி என்ற புதிய சாதனையையும் இந்த ஜோடி படைத்தனர்.

இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஜேக்கர் அலி - மஹமத்துல்லா இருவரும் 150 ரன்கள் சேர்த்ததே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... ரோஹித் தவறவிட்ட கேட்ச்..! ஹாட்ரிக் விக்கெட்டை இழந்த அக்‌ஷர் படேல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com