

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது.
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது.
பெங்களூரு பேட்டா்களில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 43 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா்.
அடுத்து விளையாடிய மும்பை அணி 19.5 ஓவரில் 170/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 50 ரன்கள், அமன்ஜோத் கௌர் 34 ரன்கள் எடுத்தார்கள்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையான போது கமலினி முதல் பந்தை டாட் ஆக்கவும் 2ஆவது பந்தில் 2 ரன்களும் 3ஆவது பந்தில் 1 ரன்னும் எடுத்தார்.
4ஆவது பந்தில் அமன்ஜோத் கௌர் 1 ரன் எடுக்க 2 பந்தில் 2 ரன்கள் தேவையாக இருந்த போது 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தன் வசமாக்கினார்.
இந்த வெற்றியுடன் மும்பை அணி ஆர்சிபியை 6 போட்டிகளில் 4இல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது கமலினிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.