ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!

இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிபடம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

விராட் கோலி சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியின்போது, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அவர் 287 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலியைச் சேரும். அவருக்கு முன்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து முதல் இரண்டு இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்) மற்றும் குமார் சங்ககாரா (14,234 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடக்க சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்கள் மற்றும் குமார் சங்ககாரா 378 இன்னிங்ஸ்களும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com