ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்படம் | AP
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு த்ரில் வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாகவும் தொடர்ச்சியாகவும் வெற்றிகளைப் பதிவு செய்து வளர்ச்சியடைந்து வருவது ஊக்கமளிப்பதாக உள்ளது. இனிமேல் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளை அப்செட் எனக் கூற முடியாது. அவர்கள் எப்போதாவது வெற்றி பெற்று அப்செட் செய்யாமல், தொடர்ச்சியாக வெற்றி பெறுவதை பழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். இப்ரஹிம் ஸத்ரனின் சதம் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 5 விக்கெட்டுகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு மற்றொரு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. நன்றாக விளையாடினீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் நீடிப்பதற்காக நாளை (பிப்ரவரி 28) நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com