இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.
விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
தொடர்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரிஷப் பந்த் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதிவேகமாக (28 பந்துகள்) அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை இதற்கு முன்பு அவரிடமே இருந்தது. தற்போது, 29 பந்துகளில் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கம்மின்ஸ் வீசிய 22.2ஆவது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் 61ரன்கள் எடுத்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளார்.
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 128/5 ரன்கள் எடுத்துள்ளது. நிதீஷ் ரெட்டி 4 ரன்களுடனும் ஜடேஜா 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர்கள்
28 பந்துகள் - ரிஷப் பந்த் (2022)
29 பந்துகள் - ரிஷப் பந்த் (2025)
30 பந்துகள் - கபில் தேவ் (1982)
31 பந்துகள் - ஷர்துல் தாக்குர் (2021)
31 பந்துகள் - ஜெய்ஸ்வால் (2024)