தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான தருணத்தில் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

படம் | AP

Published On :

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான தருணத்தில் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தியது. முதுகுப் பிடிப்பின் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்த நிலையில், முக்கியமான தருணத்தில் பந்துவீச முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், அதே சமயம் சில நேரங்களில் உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசிதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரை இழந்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால், சில நேரங்களில் உங்களது உடலுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டியிருக்கும். உங்களால் உங்களது உடல் நலனுக்கு எதிராக சண்டையிட முடியாது. பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் பந்துவீச்சில் ஈடுபட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.