ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஸ்மிருதி மந்தனா கேப்டன்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது.

இந்திய மகளிரணி - படம் | பிசிசிஐ

Updated On :

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த தொடரில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ரேனுகா சிங்குக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற தொடரின்போது, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் விளையாடாத அவர், ஒருநாள் தொடருக்காக அணியில் மீண்டும் இணைந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேனுகா சிங், 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, தொடர் நாயகி பட்டத்தையும் தட்டிச் சென்றார். பணிச்சுமையை குறைக்கும் விதமாக அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணைக் கேப்டன்), பிரதீகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசப்னிஸ், ராஹ்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டிட்டாஸ் சாது, சைமா தாக்கோர், சயலி சத்கரே.

போட்டி விவரம்

முதல் ஒருநாள் - ஜனவரி 10

இரண்டாவது ஒருநாள் - ஜனவரி 12

மூன்றாவது ஒருநாள் - ஜனவரி 15

(அனைத்துப் போட்டிகளிலும் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.