ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்டன்!

ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ரோஹித், கோலி, சுனில் கவாஸ்கர்
ரோஹித், கோலி, சுனில் கவாஸ்கர்
Published on
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.

கான்ஸ்டாஸுக்கு ஆணவமில்லை: ஆஸி. ஆலோசகர் பேட்டி!

இதுபற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், “நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எவ்வளவு காலம் விளையாடுவார்கள் என்பது அணித் தேர்வர்களின் நடவடிக்கையைப் பொறுத்து இருக்கிறது.

இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இது எங்கு நடந்த தவறு என்பது குறித்த காரணங்களைப் பற்றி சிந்திப்பது பொறுத்தமாக இருக்கும்” என்றார்.

இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே முழுமையான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றனர். விராட் கோலி ஒரு சதம் உள்பட 190 ரன்களும் ரோஹித் சர்மா வெறும் 31 ரன்களும் எடுத்தனர். மேலும், 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய இந்திய அணி 6 முறை 200 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது.

ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா

மேலும், இந்திய அணி தோல்வி பற்றி கவாஸ்கர் கூறும்போது, “கடந்த ஆறு மாதங்களில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருப்பதால் மட்டுமே தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதனால், 2027 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் போட்டியில் அணிக்கு யார் தேவை என்பதை தேர்வர்கள் முடிவு செய்வார்கள் என்பது குறித்து நம்புவோம்.

நிதீஷ் குமார் ரெட்டியை அணியில் தேர்வு செய்ததற்கு அஜித் அகர்கர் தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்துகள். வாய்ப்புக்காக பல வேகப்பந்துவீச்சாளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம்” என்றார்.

ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால்...: பத்ரிநாத் விமர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com