யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் படம்: பிடிஐ

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Published on

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளன.

நாட்டின் அனைத்து மக்களும் பிரதிநிதித்துவப்படுத்த வடக்கு, தெற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா துபையில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கின்றன.

இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:

டென்னிஸ் கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான தருணத்தில் நானும் பங்கேற்றதுக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டிபிசிபிஎல் 10 முதல்முறையாக தொழில்முறையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் பல நகரங்களில் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இதை தொழில்முறை போட்டியாக தரம் உயர்த்துகிறோம். பல இளைஞர்களுக்கு அவர்களது திறமையை வெளிக்காட்ட முக்கியமான தளமாக இந்த லீக் அமையும் என்றார்.

8 அணிகள்: மும்பை மாவேரிக்ஸ், தில்லி டைனமிக்ஸ், பெங்களூரூ பிளாஸ்டர்ஸ், கொல்கத்தா கிங்ஸ், சண்டிகர் சாம்பியன்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், அகமதாபாத் அவேஞ்சர்ஸ், சென்னை சேலஞ்சர்ஸ்.

இதில் 31 லீக் போட்டிகள், 4 பிளே- ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com