ஓய்வுக்குப் பின் மார்டின் கப்டில் கூறியதென்ன? பயிற்சியாளர் ஆகிறாரா?

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் ஓய்வுக்குப் பின் கூறியதென்ன...
மார்ட்டின் கப்டில்
மார்ட்டின் கப்டில் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன்.

வெள்ளி நிறத்திலான பெரணி செடி பதிந்த நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.

எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ’டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி.

மனைவிக்கு நன்றி

எனது மேலாளர் லீன்னி மெக்கோல்டிரிக் அதிகமாக உழைத்துள்ளார். சில நேரங்களில் அவரது உழைப்பு கண்டுக்கொள்ளாமல் சென்றுள்ளது. அவருக்கும் எனது சிறப்பான நன்றிகள். எனது மனைவி லாரா, அழகான குழந்தைகள் ஹார்லி, டெடி அவர்களுக்கும் நன்றி.

எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீதான். நான் அதற்காக கடமைப்பட்டுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி. நியூசி, உலகின் பல பகுதிகளிலும் ரசிகர்கள் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு அளித்துள்ளார்கள் என்றார்.

38 வயதாகும் கப்டில் 23 சதங்கள் அடித்துள்ளார். 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் நியூசி. அணிக்காக விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார்.

பயிற்சியாளராகும் கப்டில்?

நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:

நியூசி அணிக்காக நான் இவருடன் விளையாடியது அதிர்ஷ்டம் என்பேன். அவர் விளையாடுவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அவரது பந்தினை அடிக்கும் டைமிங்கினாலும் அதிரடியினாலும் உலகின் சிறந்த பந்துவீச்சுகளை எல்லாம் அடித்து நொறுக்குவார். உலகத் தரமான பேட்டர்.

அவருக்கான எண்களே அவரைப் பற்றி பேசும். நாங்கள் வெற்றிபெற அவர் அடித்த போட்டிகளை நான் மறக்க மாட்டேன். அவர் ஃபீல்டிங்கில் ஏற்படுத்திய தரத்தை மறக்கவே முடியாது.

அவருடைய வருங்காலத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரை மீண்டும் கிரிக்கெட் திடலின் பக்கம் விரைவில் காண்பேன் என நினைக்கிறேன் என்றார்.

ஏற்கனவே மெக்குல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராக இருக்கிறார். கப்டிலும் பயிற்சியாளர் ஆகுவாரா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com