ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மன்.
ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மன். படம்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்

தொடரை வென்றது நியூசிலாந்து: ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு!

இலங்கை உடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Published on

இலங்கை உடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 16 ரன்களில் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா - மார்க் சாப்மேன் இருவரும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார்கள்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 79 ரன்னில் ஆட்டமிழக்க மார்க்கும் 62 ரன்னில் அவுட்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 255 ரன்கள் குவித்தது. இலங்கை அணித் தரப்பில் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இலங்கையில் அதிக பட்சமாக கமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் அடித்தார். நியூசி. சார்பில் வில்லியம் ரூர்கே 3 விக்கெட்டுகளும் ஜகோப் டுஃபி 2 விக்கெட்டுகளும் மாட் ஹென்றி, நாதன் ஸ்மித், சான்ட்னர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

நியூசிலாந்து 2-0 என தொடரை வென்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி ஜன.11இல் தொடங்குகிறது. ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com