
நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் கப்டில் 23 சதங்கள் அடித்துள்ளார். 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் நியூசி. அணிக்காக விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார்.
2009இல் அறிமுகமான கப்டில் கடைசியாக 2022இல் விளையாடினார். 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் 237* ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரரும் இவரே. 1,385 பவுண்டரிகள், 383 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் தோனியை ரன் அவுட் செய்து மிகவும் புகழ்பெற்றார்.
இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் இதற்காக கப்டிலை சமூக வலைதளத்தில் திட்டிக்கொண்டிருப்பது வழக்காமானது. தற்போது, தோனி ரசிகர்களே கப்டிலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.