மணல் காகித மோசடியாளர்..! கிண்டல்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸி. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னைப் பற்றிய கிண்டலுக்கு பதிலளித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னைப் பற்றிய மணல் காகித மோசடியாளர் (சேண்ட்பேப்பர்கேட்) கிண்டலுக்கு பதிலளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெற்றது. தனது மனைவிக்கு 2ஆவது குழந்தை பிறக்க உள்ளதால் கம்மின்ஸ் விடுப்பில் சென்றுள்ளார். இலங்கை தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாகியுள்ளார். கம்மின்ஸுக்கு முன்னதாக ஸ்மித்தான் கேப்டனாக இருந்து வந்தார்.

மணல் காகித மோசடியாளர் - கிண்டல்கள்

2108இல் தென்னாப்பிரிக்காவுடனான் போட்டியில் ஸ்மித் தலைமையிலான அணியில் பந்தினை சேதப்படுத்தியதற்காக ஸ்மித் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.

அதன் விளைவாக 2 ஆண்டுகள் விளையாட தடை, கேப்டனாக பதவி வகிக்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் மட்டுமே ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.

சிட்னி டெஸ்ட்டில் ஸ்மித் ஆட்டமிழந்தபோது விராட் கோலி தனது பாக்கெட்டில் எதுவுமில்லை. பந்தினைச் சேதப்படுத்த எதையும் உபயோகிக்கவில்லை என ஸ்மித்தை கிண்டல் செய்வார்.

இந்திய ரசிகர்களும் தங்களது தோல்வியின் கவலையைப் போக்க இவ்வாறு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

கருத்து கூறுவது அவரவர் உரிமை

ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தைக்கூற உரிமை இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்ததைக் கூறலாம். நான் எனது நிலையில் மிகவும் சௌகரியாகவே உணர்கிறேன்.

நீண்ட காலமாக எங்களது அணி நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. அனைவரும் தங்களது கருத்தினை கூறுவார்கள். நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன்.

பந்துவீச்சாளர்கள் அசத்தல்

வெற்றியில் பங்கெடுத்தது மகிழ்ச்சி. பெர்த் தோல்விக்குப் பிறகு மீண்டு வந்தது சிறப்பாக இருந்தது. இது குழுவுக்கு கிடைத்த வெற்றி. எங்களது பந்துவீச்சாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள். ஸ்காட் போலண்ட் வந்தவிதம் அற்புதமானது. அந்தக் கணத்தில் அவர்செய்தது எல்லாம் நம்பமுடியாதது.

10,000 ரன்களை தவறவிட்டது

1 ரன். ஆமாம், அந்த நேரத்தில் சிறிது வருத்தமாக இருந்தது. என்னுடைய நண்பர்களுக்கு மத்தியில் நான் 10ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலேவில் (இலங்கை டெஸ்ட்) இதை முதல் விஷயமாக செய்து முடிப்பேன்.

தொடர் முழுவதும் என மனதை எந்தவிதமான நோக்கமுமின்றி திரிந்ததால் அதை இழந்துவிட்டேன். 10 ஆயிரம் ரன்களை தாண்டுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்றார்.

இலங்கை உடனான ஆஸி. டெஸ்ட் ஜன.29ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com