
உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64ஆவது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
பந்து தலைக்கு பட்டு இறந்துபோன பிலிப்ஸ் ஹக் கிளார்க்கின் உற்ற நண்பர். அவரது இறப்புக்குப் பிறகு அடுத்த நாள் இந்தியாவுடன் நடந்த டெஸ்ட்டில் சதமடித்து “எனது சிறிய சகோதரர்க்கு சமர்ப்பணம்” எனக் கூறி கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.
2015 ஆஷஸ் தொடருக்கு பின்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.
இந்த நிலையில் வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கிளார்க் பேசியதாவது:
வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றே
நான் சிறுவயதில் இருந்து பார்த்து வியந்த முன்னோடிகள், ரோல் மாடல்கள், அற்புதமான வீரர்கள் வரிசையில் நானும் இந்த விருதுபெறுவது மிகவும் கௌரவமாகக் கருதுகிறேன்.
ஓய்வு நம்மை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறது. கிரிக்கெட்டை பார்ப்பது மட்டுமே இப்போது முடிகிறது. நமது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி மக்கள் நம்மைப் புகழ்ந்து பேசுவது எல்லாம் எனக்கு 6 வயதிலேயே தொடங்கியது.
34 வயதில் ஓய்வை அறிவித்தேன். கிரிக்கெட் என்னுடைய வாழ்வாக இருந்தது. அது இன்னமும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.
கிரிக்கெட் என்பது பொதுவாக நமது வாழ்க்கை போலவே இருக்கிறது. களத்துக்குச் சென்று சதமடிப்பது பின்னர் பேட்டினை உயர்த்துவது, பின்னர் ஃபீல்டிங்கில் சென்று 2ஆவது பந்திலேயே கேட்ச்சினை தவறவிடுவது என வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.