கேப்டனாக ஏபிடி வில்லியர்ஸ்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ் கோப்புப் படம்
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் டபிள்யூசிஎல் லீக்கில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ். 16 பந்துகளில் 50, 31 பந்துகளில் 100, 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்த சாதனைப் பட்டியலில் தன் பெயரை உயரத்தில் வைத்துள்ளார்.

கடந்த 2021 முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து விடியோ வெளியிட்டு வருகிறார்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட ஓய்வை அறிவித்ததாகக் கூறியிருந்தார். அவருக்கு ஆப்ரஹாம், ஜான் என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரரராக இருந்தார்.

டபிள்யூசிஎல் (லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்) போட்டியில் பங்கேற்கும் ஏபிடி வில்லியர்ஸ் கேப்டனாகவும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியில் அறிமுக தொடரில் ஜேக் காலிஸ், கிப்ஸ், டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹிர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் இணை தலைவர் அமன்தீப் சிங் கூறியதாவது:

லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது கௌரவமாக கருதுகிறோம். ஏபிடி வில்லியர்ஸ் கேப்டனாக அணிக்கு திரும்புவது அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. அவரது தலைமைப் பண்பு எங்களை புதிய உயரத்துக்கு கொண்டுசெல்லுமென நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com