10,000 ரன்களை கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்! டெஸ்ட் கிரிக்கெட்டில்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்...
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்
Published on
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் வார்னே - முரளிதரன் டிராபி தொடர் இலங்கையில் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வென்றது குறித்து மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா!

இன்று காலை தொடங்கிய முதலாவது போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய 4-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகவில் ஒட்டுமொத்தமாக 16 வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் 10,000 டெஸ்ட் ரன்களை எட்டியவர்கள் வரிசையில் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் 35 வயதான ஸ்டீவ் ஸ்மித். இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 34 சதங்கள் மற்றும் 41 அரை சதங்கள் அடித்துள்ளார்.

ஒட்டுமொத்த அளவில் 15,921 ரன்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ராஜிநாமா! பாகிஸ்தான் திடல் விவகாரம் காரணமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com