சிஎஸ்கேவின் முதன்மையான பார்ட்னராக இணைந்த எத்திகாட் ஏர்வேஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மையான பார்ட்னராக எத்திகாட் ஏர்வேஸ் இணைந்துள்ளது.
சிஎஸ்கேவின் முதன்மையான பார்ட்னராக இணைந்த எத்திகாட் ஏர்வேஸ்!
படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மையான பார்ட்னராக எத்திகாட் ஏர்வேஸ் இணைந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஐபிஎல் மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபையில் நிறைவடைந்தது.

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில மாதங்களே இருப்பதால், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்களது நிர்வாகப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அணிகளுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிஎஸ்கேவின் முதன்மையான பார்ட்னர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மையான பார்ட்னராக எத்திகாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விடியோ சென்னை சூப்பர் கிங்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், நமது இதயம் முன்பைக் காட்டிலும் எத்திகாட் ஏர்வேஸுடன் தற்போது மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது. எத்திகாட் ஏர்வேஸுடன் இணைந்து புதிய உயரத்தை அடைய மிகவும் ஆவலாக இருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X