ஒவ்வொரு சதமும் இறைவனால் தரப்படுகின்றன..! கவாஜாவின் வெற்றி ரகசியம்!

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்தது குறித்து ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் உஸ்மான் கவாஜா.
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் உஸ்மான் கவாஜா. படங்கள்: ஏபி
Published on
Updated on
1 min read

பிஜிடி தொடரில் கவாஜா சரியாக விளையாடாமல் பும்ராவிடம் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார். மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்தது குறித்து ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நேற்று (ஜன.29) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தற்போது, ஆஸி. அணி 475 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 203, இங்கிலீஷ் 40 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். மேலும். இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் ஆஸி. வீரர் என்ற சாதனையையும் கவாஜா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் போட்டிக்கு முன்னதாக உஸ்மான் கவாஜா தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெற்றியும் தோல்வியும் ஒன்றே

ஓவ்வொரு சதமும் எல்லாம்வல்ல இறைவனால் தரப்படுகின்றன. நான் அதைத்தான் நம்புகிறேன். நல்லதோ கெட்டதோ அதை ஒரேமாதிரியாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எது நடந்தாலும் அதை நான் எனது நல்லதுக்காக நடப்பதாகவே கருதுகிறேன்.

எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் பார்த்திருக்கிறேன். ’இது எவ்வளவு மோசமானதாக இருக்கிறது?’ என நான் நினைத்த பலவற்றுக்குப் பிறகும் பல நன்மைகள் நடந்திருக்கின்றன. அதனால், எனது வாழ்க்கையை வழிநடத்த கிரிக்கெட்டை அனுமதிப்பதில்லை.

எனக்கு அழகான குடும்பம் இருக்கிறது. ஆதரவாக மனைவி இருக்கிறார். கிரிக்கெட்டை தவிர்த்து எனக்கு வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும், நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். ஆனால், உங்களுக்கே தெரியும் எல்லாவற்றையும் மேலே இருந்து ஒரு பெரிய நபர் கட்டுப்படுத்துகிறார். அதனால் சில கட்டத்துக்குப் பிறகு வாழ்க்கையை அவரிடமே விட்டுவிடுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.