23 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: ஜேக் காலிஸுக்குப் பிறகு முதல் தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் நிகழ்த்திய சாதனை குறித்து...
Corbin Bosch Fifer
கார்பின் போஸ்ச்படம்: எக்ஸ் / புரோட்டியஸ் மென்.
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே போட்டியில் சதம், 5 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் (ஜூலை 1) நிறைவடைந்தது.

குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தது மட்டுமில்லாமல் பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்தும் அசத்தினார்.

தென்னாப்பிரிக்க அணியில் 2002-இல் ஜாக் காலிஸ் ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு கார்பின் போஸ்ச் அந்த சாதனையை நிகழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க வீரர் ஆகியுள்ளார்.

கடைசி டெஸ்ட் ஜூலை 6-ஆம் தேதி தொடங்குகிறது. தெ.ஆ. அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Summary

South African player Corbin Bosch has set a new record after 23 years by scoring a century and taking 5 wickets in a single match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com