பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி அளித்த நோட்டீஸ் குறித்து...
Bengaluru Stampede, BCCI logo.
பெங்களூரு கூட்ட நெரிசல், பிசிசிஐ இலச்சினை.கோப்புப் படங்கள்.
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.

அந்தக் கொண்டாட்டத்தில் சின்னசாமி கிரிக்கெட் திடலுக்கு முன்பாக ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.

ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் அளித்த புகாரின் பேரில் இது குறித்து, பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி அருண் மிஸ்ரா ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் விளக்கம் கேட்டு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்ட நெரிசலின் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்தப் புகாருக்கு சம்பந்தப்பட்ட ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கமும் தங்களது விளக்கத்தை எழுத்துபூர்வமாக சமர்பிக்க வேண்டும்.

இந்தப் புகார் ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து பதியப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி அணியின் நிர்வாகம் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புகார் தெரிவித்தவர் தவறுகளுக்கு ஆர்சிபி அணி பொறுப்பேற்கும்படி தெரிவித்துள்ளார். மேலும், ஆர்சிபி அணியை தடைசெய்யவும் தற்போது நடைபெறும் விற்பனை பேச்சுவார்த்தைகளை செல்லாததாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புகாரில் ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் மீதான பணியிடை நீக்கத்தை தடைசெய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

IPL champions Royal Challengers Bengaluru have landed in further trouble after BCCI Ombudsman-cum-Ethics Officer Justice (Retd) Arun Mishra directed the franchise, along with the Karnataka State Cricket Association (KSCA), to file written submissions over gross negligence during the team's victory celebrations in Bengaluru, which led to the death of 11 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com