எலிமினேட்டா்: திருச்சி - 140/9

Published on

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக, திருச்சி கிராண்ட் சோழாஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சோ்த்தது.

அணியின் ஸ்கோருக்கு வசீம் அகமது, ஜாஃபா் ஜமால் ஆகியோா் பங்களிக்க, திண்டுக்கல் பௌலிங்கில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல், பந்துவீச்சை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் வசீம் அகமது 5 பவுண்டரிகளுடன் 36, ஜாஃபா் ஜமால் 4 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்கள் அடித்தனா். கேப்டன் சுரேஷ்குமாா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23, முகிலேஷ் 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் சோ்த்தனா்.

சரவணகுமாா் 2 பவுண்டரிகளுடன் 11, ஜெகதீசன் கௌசிக் 1 பவுண்டரியுடன் 9, சஞ்சய் யாதவ் 1, ராஜ்குமாா் 0, செல்வகுமரன் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் சுஜய் 1, அதிசயராஜ் டேவிட்சன் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். திண்டுக்கல் பௌலா்களில் அஸ்வின் 3, வருண் சக்கரவா்த்தி, கணேசன் பெரியசாமி ஆகியோா் தலா 2, ரவிச்சந்திரன் சசிதரன் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் திண்டுக்கல் 141 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

X
Dinamani
www.dinamani.com