டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் குறித்து...
India's Harmanpreet Kaur celebrates the wicket of England's Nat Sciver-Brunt during the second Women's International T20
இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்திய மகளிரணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.

இந்திய மகளிரணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இந்திய மகளிரணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த போட்டிகள் முறையே ஜூலை 4,9,12ஆம் தேதிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற மகளிரணி கேப்டன் என்ற சாதனை ஹர்மன்ப்ரீத் கௌர் வசம் சென்றடையும்.

தற்போதைக்கு ஆஸி. கேப்டன் மெக் லானிங் முதலிடத்தில் இருக்க ஹர்மன்ப்ரீத் கௌர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மெக் லானிங் ஓய்வு பெற்றதால் இந்திய அணி கேப்டனுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிக டி20 போட்டிகளில் வென்ற மகளிரணி கேப்டன்கள்

1. மெக் லானிங் - 76 வெற்றிகள் (ஆஸி. - 100 போட்டிகளில்)

2. ஹர்மன்ப்ரீத் கௌர் - 73 வெற்றிகள் (இந்தியா - 124 போட்டிகளில்)

3. ஹீத்தர் நைட் - 72 வெற்றிகள் (இங்கிலாந்து - 96 போட்டிகளில்)

Summary

Indian women's T20 team captain Harmanpreet Kaur is set to set a new record in T20Is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com