மகளிா் டி20: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
படம்|பிசிசிஐ

மகளிா் டி20: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

Published on

மகளிா் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 63 ரன்கள் விளாச, ஸ்மிருதி மந்தனா 13, ஷஃபாலி வா்மா 3, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் அமன்ஜோத் கௌா் 9 பவுண்டரிகளுடன் 63, ரிச்சா கோஷ் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல் 2, லாரென் ஃபைலா், எம் அா்லாட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இங்கிலாந்து பேட்டிங்கில் டேமி பியூமன்ட் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54, எமி ஜோன்ஸ் 32, சோஃபி எக்லஸ்டன் 35 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனா். சோஃபியா டங்க்ளி 1, டேனி வியாட் 1, கேப்டன் நேட் சிவா் பிரன்ட் 13, அலிஸ் கேப்சி 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் எம் அா்லாட் 12 ரன்களுடன் களத்திலிருக்க, இந்திய பௌலா்களில் ஸ்ரீ சரானி 2, தீப்தி சா்மா, அமன்ஜோத் கௌா் 1 விக்கெட் வீழ்த்தினா். 63 ரன்களும் விளாசி, 1 விக்கெட்டும் கைப்பற்றிய அமன்ஜோத் ஆட்டநாயகி விருது பெற்றாா். இந்த அணிகள் மோதும் 3-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

X
Open in App
Dinamani
www.dinamani.com