ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
indian team captain shubman gill
கேப்டன் ஷுப்மன் கில்படம் | AP
Published on
Updated on
1 min read

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 ரன்களுடன் களத்தில் இருந்தார். 41 ரன்களுடன் ஜடேஜாவும் அவருடன் களத்தில் இருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

ஜோனதன் டிராட் கூறுவதென்ன?

சதம் விளாசி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ஷுப்மன் கில்லின் யுக்திகள் மற்றும் அவரது உடல்மொழி ஆகியவை அவர் உலகத் தரத்திலான வீரர் என்பதை காட்டுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஷுப்மன் கில் ரன்கள் குவித்த விதம் சிறப்பாக இருந்தது. அவரது உடல்மொழி மற்றும் களத்தில் நிலைத்து நின்று விளையாடும் விதம் அணிக்காக நான் இருக்கிறேன் எனக் கூறுவதாக இருந்தது. அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. அணிக்காக நான் இருக்கிறேன். ஆட்டமிழக்காமல் விளையாடுவேன். நாளை மீண்டும் எனது ரன்குவிப்பை தொடர்வேன் என்பது அவரது உடல்மொழியின் மூலம் தெரிந்தது.

ஷுப்மன் கில்லுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். பிரைடான் கார்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவருக்கும் எதிராக அவர் வெவ்வேறு யுக்திகளை பயன்படுத்தி ரன்கள் குவிக்கிறார். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது என்றார்.

Summary

India captain Shubman Gill's clearly thought-out strategy and body language on the opening day of the second Test against England are traits of a world-class player with a bright future, says former cricketer Jonathan Trott.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com