டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் அசத்திய விமல் குமார் குறித்து...
Vimal Khumar won the Man of the Match award.
ஆட்டநாயகன் விருது வென்ற விமல் குமார்.படம்: எக்ஸ் / டிஎன்பிஎல்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நேற்றிரவு (ஜூலை 4) குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் வீரர் விமல் குமார் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 8.4 ஓவரில் 63/3 என இருந்தது. பின்னர், விமல் குமார் வந்ததும் அணியில் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

16 ஓவர்கள் முடிவில் 127-4 என இருந்தது. 4 ஓவர்களுக்கு 52 ரன்கள் தேவையாக இருந்தது. 17-ஆவது ஓவரில் 4 6 6 6 6 6 என ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி விமல் குமார் போட்டியையே மாற்றிவிட்டார்.

டிஎன்பில் வரலாற்றில் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் அணி 4-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Dindigul player Vimal Khumar scored 34 runs in a single over to lead the team to victory in the TNPL Qualifier 2 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com