மகளிா் டி20: தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து

மகளிா் டி20: தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து
Published on
Updated on
1 min read

இந்திய மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் இந்தியா வென்றிருந்த நிலையில், இந்த ஆட்டத்தை வென்ன் மூலமாக தொடரை இங்கிலாந்து தக்கவைத்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்க்க, இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 166 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் சோஃபியா டங்க்ளி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75, டேனி வியாட் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனா்.

சோஃபி எக்லஸ்டன் 10, ஆலிஸ் கேப்சி 2, பெய்க் ஸ்கோல்ஃபீல்டு 4, எமி ஜோன்ஸ் 0, கேப்டன் டேமி பியூமன்ட் 2, இசி வாங் 0, லாரன் ஃபைலா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் சாா்லி டீன் 6, லாரென் பெல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் அருந்ததி ரெட்டி, தீப்தி சா்மா ஆகியோா் தலா 3, ஸ்ரீசரானி 2, ராதா யாதவ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 172 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரிகளுடன் 56, ஷஃபாலி வா்மா 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 47 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 23, ரிச்சா கோஷ் 7 ரன்களுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில் அமன்ஜோத் கௌா் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் லாரென் ஃபைலா் 2, லாரென் பெல், இசி வாங், சோஃபி எக்லஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com