2025-இல் ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள்!

ஆஸி. டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து...
Webster, Alex Carey, Travis Head.
வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட். படங்கள்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் இந்தாண்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆடவர் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வென்றுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்க வீரர்கள் உள்பட டாப் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்துள்ளது.

ஆஸி. அணியில் ஸ்டீவ் ஸ்மித் தவிர டாப் ஆர்டரில் மோசமாகவே விளையாடியுள்ளது.

பலவீனமான டாப் ஆர்டர்

தொடக்க வீரர்களான கவாஜா, சாம் கான்ஸ்டாஸ் மோசமான தொடக்கத்தை அளிக்கிறார்கள்.

டேவிட் வார்னருக்கு மாற்று இதுவரை யாரும் சரியாக அமையவில்லை. மே.இ.தீ. அணிகளுக்கு எதிரான தொடரில் லபுஷேனை பிளேயிக் லெவனில் எடுக்கவில்லை.

கேமரூன் கிரீனை நம்பிய ஆஸி. அணிக்கு கடைசி டெஸ்ட் 2-ஆவது இன்னிங்ஸில் ஓரளவுக்கு பலன் கிடைத்தாலும் அவரும் சுமாராகவே விளையாடி வருகிறார்.

இப்படி இருந்தும் ஆஸி. எப்படி வெல்கிறது? அதற்குக் காரணம் மிடில் ஆர்டர்தான்.

பலம்வாய்ந்த மிடில் ஆர்டர்

ஆஸி. மிடில் ஆர்டரில் நம்.5, 6,7-இல் களமிறங்கும் வீரர்களான டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடுகிறார்கள்.

குறிப்பாக 2025-இல் இவர்களது சராசரி டாப் ஆர்டரை விட நன்றாக இருக்கிறது.

  • டிராவிஸ் ஹெட் - சராசரி 35.1

  • பியூ வெப்ஸ்டர் - சராசரி - 40.7

  • அலெக்ஸ் கேரி - சராசரி - 56.9

Summary

The Australian men's Test team's middle-order batting has been playing very well this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com