
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.
முதலிரண்டு போட்டிகளை இந்தியா வெல்ல, 3ஆவது போட்டியை இங்கிலாந்து வென்றது. 4-ஆவது போட்டியில் மீண்டெழுந்த இந்திய மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167/7 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 75 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து மகளிரணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இதில் கடைசி ஓவரில் 19.3ஆவது பந்தில் ராதா யாதவ் ஓடி வந்து பந்தினை தாவிப் பிடித்ததார். இந்த கேட்ச் விடியோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றிபெற்றாலும் 3-2 என இந்திய அணி தொடரை வென்றது.
இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக இந்திய அணி டி20 தொடரை வெல்வது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.