
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து,முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே திரட்டியது.
57 பந்துகளில் 75 ரன்கள்(6 பௌண்டரி, 3 சிக்ஸர்) விளாசிய நியூஸிலாந்து வீரர் டிம் ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டர்.
ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்கா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேயை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.