
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
உலக அளவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிதான் முதன்மையானதாக இருக்கிறது.
பல கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து ரசிகர்களாக இருப்பதால் இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி போட்டியில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இந்திய வீரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் சீருடைகளை அணிந்தும் யுனைடெட் வீரர்கள் இந்திய அணியின் சீருடைகளையும் அணிந்து கொண்டார்கள்.
இந்தப் புகைப்படங்கள் இந்திய கால்பந்து, கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சுழல்பந்து வீரர் குல்தீப் யாதவ் மிகவும் ஆர்வமாக கேள்விகளை கேட்டு வந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 3-4-3 என்ற யுக்தியில் விளையாடுவீர்களா என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டதாகவும் பல ஆண்டுகளாக கால்பந்தை கவனித்து வருவதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிராஜ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரது முன்மாதிரியான ரொனால்டோ அந்த அணியில் சில காலம் விளையாடியுள்ளார்.
முகமது சிராஜ் விக்கெட் எடுத்தால் ரொனால்டோ பாணியில் கொண்டாடுவது புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.