
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார்.
மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 43 ஓவர்கள் பேட்டிங் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அரைசதமடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் திடலில் அரைசதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
1974ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 58 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த 50 ஆண்டுகளில் மீண்டும் ஒரு இந்தியர் அரைசதம் அடித்தது இப்போதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருமே 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது சுவாரசியமான ஒற்றுமையாக மாறியிருக்கிறது.
சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து இந்த சாதனையை தவறவிட்டதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.