
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கேப்டனாக வரலாறு படைத்த ஷுப்மன் கில்
முதல் இன்னிங்ஸில் 15* ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை இளம் கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த 1978-79 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது வந்தது. அதனை தற்போது ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன்கள்
733* ரன்கள் - ஷுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிராக (2025)
732 ரன்கள் - சுனில் கவாஸ்கர் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக (1978/79)
655 ரன்கள் - விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, (2016/17)
610 ரன்கள் - விராட் கோலி - இலங்கைக்கு எதிராக, (2017/18)
593 ரன்கள் - விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக, (2018)
Indian team captain Shubman Gill has created history in Test matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.