இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி
இங்கிலாந்து வருகை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வருகை

இங்கிலாந்து 5 கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் வந்தடைந்தது.
Published on

இங்கிலாந்து 5 கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் வந்தடைந்தது.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் தொடா் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

ரோஹித், கோலி இல்லை:

நட்சத்திர வீரா்கள் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் அடுத்தடுத்து டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், இந்திய அணியில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அவா்கள் இருவரும் இல்லாத நிலையில் இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ தோ்வுக் குழு அறிவித்தது.

ஏற்கெனவே பல வீரா்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்று, 3 அதிகாரபூா்வமற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடி வருகின்றனா். தமிழக வீரா் சாய் சுதா்ஷனும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் டெஸ்ட் ஜூலை 2-6-இல் பா்மிங்ஹாமிலும், ஜூலை 10-14-இல் லாா்ட்ஸிலும், ஜூலை 23-27-இல் மான்செஸ்டரிலும், ஆக. 4-8-இல் ஓவல் மைதானத்திலும் நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com