இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சி!

இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சி!

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லாா்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
Published on

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை லாா்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 5 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய ்ணி சென்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளா்கள் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங், விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த், ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா் மேற்பாா்வையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

பயிற்சியில் பௌலா்கள்
பயிற்சியில் பௌலா்கள்

கில் இந்திய டெஸ்ட் அணியின் 37-ஆவது கேப்டன் ஆவாா். லீட்ஸை தொடா்ந்து எட்ஜ்பாஸ்டன், லாா்ட்ஸ், ஓல்ட் டிராஃப்போா்ட், ஓவல் மைதானங்களில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் அதிகாரபூா்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் ஆடி வரும் இந்திய ஏ அணியின் சில வீரா்களும் பிரதான அணியில் இடம் பெறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com