ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்படம் | AP

3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!

ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடாதது குறித்து...
Published on

ஆஸி. முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடவில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கடைசியாக, ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவுடன் விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி ஓவரில் ஃபுல் டாஸ் பந்தில் போல்ட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன்.11ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 55 சராசரி கொண்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

நான் பொதுவாகவே வீட்டுக்கு அருகில் எங்காவது பேட்டை வைத்து ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்து வருவேன். ஆனால், தற்போது வேண்டுமென்றே பேட்டை சிறிது காலமாக தொடாமல் இருந்தேன். அதுவும் நல்லதுதான்.

சாம்பியன்ஸ் டிராபியில் ஷமியின் ஃபுல் டாஸ் பந்தினை தவறவிட்டதில் இருந்து நான் பேட்டினை தொடவில்லை. அதிர்ஷ்டசமாக எல்லாம் சரியாக நடக்கிறது. நான் நன்றாக இயங்குகிறேன். வலுவாகவும் இருக்கிறேன்.

பொதுவாக எப்படி இருக்குமெனில் நான் முதல் முறை அடிக்கும்போது நன்றாக விளையாடுவேன், பிறகு மோசமாக, அடுத்து அங்கிருந்து சிறப்பாக ஆடுவேன். ஆனால், இந்தமுறை முதலிரண்டுமே நன்றாக அமைந்தது. அடுத்த சில நாள்களுக்கு பல மணி நேரங்கள் பயிற்சி செய்ய தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com