
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது.
மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு
இன்னும் இரண்டு வாரங்களில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது.
16 பேர் கொண்ட இந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர் கீமர் ரோச் இடம்பெறவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சாய் ஹோப் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்களுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரிலிருந்து 2025-2027 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி இரண்டு அணிகளுக்கும் தொடங்குகிறது.
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி விவரம்
ராஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமெல் வாரிக்கேன், கெவ்லான் ஆண்டர்சன், கிரைக் பிரத்வெயிட், ஜான் கேம்ப்பெல், கீஸி கார்ட்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப், டெவின் இம்லாச், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், ஜோஹன் லாய்னே, மிக்கில் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், ஜேடன் சீல்ஸ்.
டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட் - ஜூன் 25 - ஜூன் 29, பார்படாஸ்
2-வது டெஸ்ட் - ஜூலை 3 - ஜூலை 7, கிரெனடா
3-வது டெஸ்ட் - ஜூலை 12 - ஜூலை 16, ஜமைக்கா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.