
நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 19 சிக்ஸர்கள் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடும் ஃபின் ஆலன் அதிவேகமாக சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆக இருந்தது.
எம்எல்சி டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் ஃபிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து ஃபின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்
1. ஃபின் ஆலன் - 19 சிக்ஸர்கள் (2025)
2. கிறிஸ் கெயில் - 18 சிக்ஸர்கள் (2017)
3. சாஹில் சௌஹான் - 18 சிக்ஸர்கள் (2024)
4. கிறிஸ் கெயில் - 17 சிக்ஸர்கள் (2013)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.