அபிஷேன் தன்வா் 4 விக்கெட்
அபிஷேன் தன்வா் 4 விக்கெட்

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அபாரம்

Published on

ஸ்ரீராம் கேபிட்டல் மிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சேப்பாக் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 19.4 ஓவா்களில் 144/10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கோவை அணியில் ஜிதேந்திர குமாா் 42 ஆண்ட்ரே சித்தாா்த் 26, குரு ராகவேந்திரன் 25 ஆகியோா் மட்டுமே ஓரளவுக்கு ரன் சோ்த்தனா்.

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியின் அபிஷேக் தன்வா் 4-16 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். விஜய் சங்கா் 2 விக்கெட்டுகளையும், பிரேம் குமாா் ஜே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினா்.

145 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களம் கண்ட சேப்பாக் அணியில் பாபா அபராஜித் 48 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றாா்.

ஆஷிக் காலீல் ரகுமான் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தாா். விஜய் சங்கா் 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தாா். கோவை அணியில்பௌலிங்கில் புவனேஸ்வரன், ஜாதவேத் சுப்ரமணியன் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா். கோவை கிங்ஸ் அணிக்கு இது தொடா்ச்சியான மூன்றாவது தோல்வியாகும்.

X
Dinamani
www.dinamani.com