40 வயதிலும் பந்தைப் பாய்ந்து பிடித்த டு பிளெஸ்ஸி: டிஎஸ்கே த்ரில் வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் நடந்தது குறித்து...
Du Plessis and Noor ahamed from MLC T20 league.
பாய்ந்து பிடிக்கும் டு பிளெஸ்ஸி. உடன் நூர் அகமது. படங்கள்: எக்ஸ் / எம்எல்சி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டிஎஸ்கே 185 / 6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 44 பந்துகளில் 65 ரன்களும் சவேஜ் 34 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தார்கள்.

கேப்டன் டு பிளெஸ்சிஸ்18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விளையாடிய எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸ் 20 ஓவர்களில் 182/8 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதில் அதிகபட்சமாக மோனக் படேல் 62, மைக்கேல் பிரேஸ்வெல் 38 ரன்களும் எடுத்தார்கள்.

நிகோலஸ் பூரன் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவினார்.

இந்தப் போட்டியின்போது அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அடித்த பந்தினை டு பிளெஸ்ஸி தாவிப் பிடிப்பார். இது போட்டியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

40 வயதிலும் டு பிளெஸ்ஸி பிடித்த கேட்ச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com