பாட் கம்மின்ஸ் சாதனை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் பலகையில் இடம்!

லார்ட்ஸ் சாதனை பட்டியலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த ஆஸி. வீரர் குறித்து...
Pat Cummins joins Lords Honours Board.
லார்ட்ஸ் சாதனை பட்டியலில் இணைந்த பாட் கம்மின்ஸ்.படங்கள்: ஐசிசி
Published on
Updated on
1 min read

லார்ட்ஸ் நன்மதிப்பு பலகையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த ஆஸி. வீரராக பாட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்க அணி வென்றது. 27 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்று அசத்தியது.

இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பாட் கம்மின்ஸ் (80) முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் திடலில் 5 விக்கெட்டுகள் எடுத்து ஹானர்ஸ் போர்ட் எனப்படும் நன்மதிப்பு பலகையில் இடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக 2013இல் ரியான் ஹாரிஸ் என்ற ஆஸி. வீரர் இந்தப் பலகையில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

32 வயதாகும் பாட் கம்மின்ஸ் 68 டெஸ்ட் போட்டிகளில் 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்த சீசனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இவர் ஒரு சிங்கிள் எடிஷனில் மட்டும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-ஆவது இடம் பிடித்துள்ளார்.

நாதன் லயன் 2021-23 எடிஷனில் 88 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கம்மின்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com