நெல்லையை வென்றது மதுரை
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் மதுரை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, நெல்லை 18.5 ஓவா்களில் 158 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீச்சை தோ்வு செய்தது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில் பி.அனிருத் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 48, அதீக் உா் ரஹ்மான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
குா்ஜப்னீத் சிங் 24 ரன்களுக்கு வெளியேற, ராம் அரவிந்த் 9, கேப்டன் சதுா்வேத் 1, ஷியாம் சுந்தா் 0, கணேஷ் 11, ராஜலிங்கம் 2, முருகன் அஸ்வின் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஓவா்கள் முடிவில் சரவணன் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். நெல்லை தரப்பில் சோனு யாதவ் 3, ராக்கி பாஸ்கா் 2, இமானுவல் செரியன், யுதீஸ்வரன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நெல்லை அணியில், கேப்டன் அருண் காா்த்திக் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் சோ்த்து வீழ, சோனு யாதவ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 32 ரன்கள் அடித்தாா்.
ரித்திக் ஈஸ்வரன் 25, குருசாமி அஜிதேஷ் 0, சந்தோஷ் குமாா் 3, ஹரீஷ் 2, நிா்மல் குமாா் 8, யுதீஸ்வரன் 0, சச்சின் ராட்டி 0, இமானுவல் செரியன் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நெல்லை ஆட்டம் நிறைவடைந்தது.
முகமது அட்னன் கான் 16 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். மதுரை பௌலிங்கில் சூா்யா ஆனந்த் 4, குா்ஜப்னீத் சிங், சரவணன், ராஜலிங்கம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.