டிஎன்பிஎல்: அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்த அருண் கார்த்திக்!

டிஎன்பிஎல் தொடரில் அருண் கார்த்திக் நிகழ்த்திய சாதனை குறித்து...
Arun karthick Most runs in TNPL.
அருண் கார்த்திக்படம்: எக்ஸ் / டிஎன்பிஎல்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து அருண் கார்த்திக் சாதனை படைத்துள்ளார்.

நெல்லை ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடும் அருண் கார்த்திக் (39 வயது) டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெகதீசனை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்று சேலத்தில் நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியும் நெல்லை ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 168/9 ரன்கள் சேர்க்க, அடுத்து விளையாடிய நெல்லை ராயல்ஸ் அணி 18.5ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் அருண் கார்த்திக் 43 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அசத்தினார். இருப்பினும் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

1. அருண் கார்த்திக் - 2,304 ரன்கள்

2. என்.ஜெகதீசன் - 2,284 ரன்கள்

3. பாபா அபரஜித் - 2,257 ரன்கள்

4. ஹரி நிஷாந்த் - 1,700 ரன்கள்

5. கே.எம்.காந்தி - 1,607 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com