பதும் நிசாங்கா சதம்: 200 ரன்களை கடந்த இலங்கை அணி!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தும் நிசாங்கா குறித்து...
First home century for Pathum Nissanka
பதும் நிசாங்கா. படம்: இலங்கை கிரிக்கெட்
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசாங்கா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

காலே திடலில் நடைபெற்றுவரும் டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் 495 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 163 ரன்கள் குவித்தார்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இலங்கை அணி 52 ஓவர்கள் முடிவில் 204/2 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது களத்தில் மேத்யூஸ், பதும் நிசாங்கா விளையாடி வருகிறார்கள்.

சிறப்பாக விளையாடிவந்த தினேஷ் சண்டிமால் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பதும் நிசங்கா நிதானமாக விளையாடி 160 பந்துகளில் 116 ரன்கள் அடித்துள்ளார். மொத்த 3 சதங்கள் அடித்துள்ள நிசாங்காவுக்கு சொந்த மண்ணில் இது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

291 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 3-ஆவது நாளின் முடிவில் 300 ரன்களை எட்டினால் இலங்கை அணிக்கு போட்டியை சமன்செய்ய வாய்ப்பிருக்கிறது.

வங்கதேச அணி சார்பில் நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com