
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(ஜூன் 20) மதியம் 3.30 மணிக்கு ஹெட்டிங்லேயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் சத்தேஸ்வர் புஜாரா டெஸ்ட் தொப்பியை வழங்கி கௌரவப்படுத்தினார். மேலும், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கருண் நாயருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
போட்டியின் ஓரிரு நாள்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.
இந்திய அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி விவரம்
ஜாக் கிராலி , பென் டக்கெட், ஆய்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்) , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் , பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.
இதையும் படிக்க : ஆஸி. ஏ அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக டிம் பெய்னி நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.