இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்.
திலீப் தோஷி.
திலீப் தோஷி.
Published on
Updated on
1 min read

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு(ஜூன் 23) காலமானதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலமான தோஷிக்கு வயது 77. அவருக்கு கலிந்தி என்ற மனைவியும், நயன், விசாகா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

தோஷி, சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாகவே அறிமுகமானார். 1979 ஆம் ஆண்டு தனது 32 வயதில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 1986 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக விளையாடினார். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்துவந்த திலீப் தோஷி, இந்திய அணிக்காக 33 போட்டிகளில் விளையாடி 114 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளிலும் திலீப் தோஷி விளையாடியுள்ளார். 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ந்து திலீப் தோஷி, முதல் தர கிரிக்கெட்டில் சௌராஷ்டிரா, வங்காளம், வார்விக்‌ஷயர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் அணிகளுக்காக 238 போட்டிகளில் விளையாடி 898 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க... போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com