
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கே.எல்.ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 350 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
கே.எல்.ராகுல் நம்பிக்கை
இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்படும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் டெஸ்ட் போட்டிக்கு கண்டிப்பாக முடிவு இருக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதில் தெளிவாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்கள். அவர்கள் விளையாடும் விதமும் அதற்கேற்றவாறு உள்ளது. இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகாது: இங்கிலாந்து வீரர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.